இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற படகு ஒன்றில்
அரசியல் தஞ்சம் கோரும் நோக்கில் இரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சென்றதாக
அவுஸ்திரேலிய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஊடகவியலாளர்கள் அமெரிக்கா மற்றும் ஒல்லாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த ஊடகவியலாளர்கள் அமெரிக்கா மற்றும் ஒல்லாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் பொதுத் தேர்தல் நடைபெற்ற போது கடல்
பாதுகாப்பு சற்று தளர்த்தப்பட்டிருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி இவர்கள் பயணித்த படகு அவுஸ்திரேலியா கடற்பரப்பிற்குள்
பிரவேசிக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
லுகிடோல்சன் மற்றும் வேன்வூடட் ஆகிய பெயர் கொண்ட இந்த ஊடகவியலாளர்களிடம் அவுஸ்திரேலிய விசா அனுமதி
இருந்ததாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டோனி ஆபட், போலி அகதிகளை ஏற்றிய படகுகள்
எவ்வித மன்னிப்பு வழங்கப்படாது திருப்பி அனுப்பி வைக்கப்படும் என
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக