உற்று ப்பாரடா வெள்ளையனே எம் இனம் அழிந்து போனதை
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24 ஆவது கூட்டத்தொடர் ஆரம் பமாகியுள்ள நிலையில்
ஐ.நா. முன்றலில் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது .
லோகநாதன் மருதையாவினால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்களின் காட்சி
எதிர்வரும் 15 ம் திகதி வரையும் , அதன் பின்னர் 23 ம் திகதியிலிருந்து 27
ம் திகதி வரையிலும் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள் ,
ஊடகவியலாளர்கள் , பொதுமக்கள் ஆகியோரின் புகைப்படங்களும் விமான
குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட சடலங்களின் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன
.
இனப்படுகொலையை விபரிக்கும் இப்புகைப்படங்களை ஐ.நா. மனித உரிமை பேரவை
கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வந்திருக்கும் உலக நாடுகளின் பிரதிநிதிகளும்
ஜெனிவாவில் உள்ள பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர் .
இதேவேளை , இப்புகைப்பட கண்காட்சியை தடை செய்யுமாறு ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜெனிவா பொலிஸாரை கோரியுள்ளனர் .
இது பொய்யான புகைப்படங்கள் என ஜெனிவாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் .
ஏற்கனவே பொலிஸாரின் அனுமதி வழங்கியிருந்த போதிலும் நேற்றுக் காலையில்
அங்கு வந்த பொலிஸார் , கூடாரம் ஒன்றிற்குள் இந்தப் புகைப்படங்களை
வைக்குமாறும் , கோரமான காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களை அதிலிருந்து
அகற்றுமாறும் தெரிவித்ததாக இதன் ஏற்பாட்டாளரான மருதையா தெரிவித்தார் .
இப்புகைப்படக் காட்சி காலை 7.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்று வருகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக