யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர்
அனந்தி சசிதரன் பயணம் செய்த வாகனத்தின் மீது நேற்றிரவு தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
அனந்தி சசிதரன் பயணம் செய்த வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்த இராணுவ
வாகனம் ஒன்றுக்குப் பின்னால் வந்த, உந்துருளியில் இருந்தே, கற்கள்
வீசப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைகளை முடித்து விட்டு சுழிபுரம் நோக்கிச் சென்று
கொண்டிருந்த போது நேற்றிரவு யாழ். ஐந்து சந்திப் பகுதியில் இந்தச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த மர்மநபர்களால் வீசப்பட்ட கற்கள் அனந்தியின்
வாகனத்தின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திய போதிலும் அவர் எந்தவித
காயமுமின்றி தப்பினார்.
அண்மையில் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து காணாமற்போனவர்கள் தொடர்பாக முறையிட்டிருந்தார் அனந்தி.
நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் பலர் சிறிலங்கா படையினரால் மிரட்டப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தன்னைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவது
குறித்து நேற்று முன்தினம் ஜெனிவாவில் தொடங்கிய ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்
கூட்டத்தொடரிலும் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசுக்கு எச்சரிக்கை
விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் அரசுக்கு இயலாமையே என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக