சிரியாவில் இராசயன ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய புதிய காணொளிக் காட்சிகள் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் சிஎன்என் இணையத்தளம் இக்காட்சிகளை தமது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இராசயன ஆயுத தாக்குதலை காரணம் காட்டி அமெரிக்கா சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் முனைப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களின் ஆதரவைப்பெற முயற்சித்து வருகிறது ஒபாமா நிர்வாகம். அடுத்த வாரம் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் இவ்வீடியோ காட்சிகள் அவர்களுக்கும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் குறித்த வீடியோ காட்சிகளை தமது இணையத்தில் வெளியிட்டுள்ள சிஎன் என் இணையத்தளம் இக்காட்சிகளில் வரும் பொதுமக்கள் இராசயன ஆயுத தாக்குதலால் துடிதுடித்து இறப்பதே காண்பிக்கப்படுவதாகவும் எனினும் இதனை யார் நடத்தினார்கள் எனும் சாட்சிகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரியாவுக்கு பிரிட்டிஷ் நிறுவனங்கள் சில இராசயனப் பொருட்களை தொடர்ச்சியாக கடந்த ஆறு வருடங்கள் விற்பனை செய்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சோடியம் பிளாரைட் இராசயனப் பொருட்களைக் கொண்டே இராசயன ஆயுத தாக்குதலுக்கு தேவையான சரின் வகை ஏவுகணைகளை சிரியா உருவாக்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இவ்விஅகாரம் பிரித்தானிய முன்னாள் அதிபர் டானி பிளேயர் ஆட்சி மீது கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக