செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு,
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை கண்காணிக்கும் சர்வதேச
குழுவொன்றின் தலைவராக இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி
செயற்படவுள்ளார். இதனை அவர் பி.பி.சி செய்திச் சேவையிடம்
உறுதிப்படுத்தியுள்ளார்.
தான் தலைமை வகிக்கவுள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவில் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தமது குழு எந்த மாகாணத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது என்பது தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில், இலங்கை சென்றதன் பின்னரேயே அது அறியவரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இலங்கை தேர்தல்கள் செயலகம் தமது நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆனாலும் சுயாதீனமாக முறையிலேயே வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்லும் கண்காணிப்பாளர்கள் செயற்படுவார்கள் என்று கோபால்சாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக