
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான
வேட்புமனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த அன்றே
வென்றுவிட்டது. அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம் என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்
தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பெறப்போகின்ற பாரிய வெற்றி தமிழ் மக்களை அடிமைத்தனத்திலிருந்து
மீட்பதாக இருக்க வேண்டும். அதற்கான ஆணையை மக்கள் அர்ப்பணிப்போடு வழங்க
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியின் பளையில் சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே
பா.அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். சர்வதேசம் தமிழ் மக்களின்
பிரச்சினைகளை உணர்ந்து கொண்டுள்ளது. அதுபோல, பொறுப்புக்கூற வேண்டிய
அவசியத்தையும் உணர்ந்துள்ளது. இப்படியான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்று சர்வதேசத்தின் முன் தமிழ் மக்களின் ஏக
பிரதிநிதிகள் என்பதை மீண்டும் உணர்ந்தவேண்டிய தேவையுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக