இலங்கையின் வடக்கில் முக்கியமாக தமிழ் மக்கள் கால் நூற்றாண்டுக்குப்
பின்னர் முதல் தடவையாக தமக்கான நிர்வாகம் ஒன்றை வாக்களிப்பின் மூலம் தெரிவு
செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை கிடைத்துள்ளது.
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்திற்கான சபை மாத்திரமே
இயங்காமல் இருந்து வந்தது. பலமான நிலையில் இருக்கும் தமிழ்த் தேசிய
அணியொன்று இந்த தேர்தலில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள்
தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக