தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன் மீது கிளிநொச்சியில் வைத்து இராணுவத்தினரால் தாக்குதல் முயற்சி
ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் பன்னங்கண்டியில் உள்ள ஜீ.ரி.எம்.எஸ்
பாடசாலையில் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் மீது இராணுவத்தினர்
தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறீதரன் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குதல் மேறம்கொள்ள முற்பட்டுள்ளனர்.
ஆயினும் பாராளுமன்ற உறுப்பினரின் மெய்ப் பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் இதேவேளை சிறீதரனைக் கொல்வோம் என்று இராணுவத்தினர் துப்பாக்கிகளை எடுத்து மிரட்டியதாகவும் பொது மக்கள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் மக்கள் கிளிநொச்சியில் அமோகமாக வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை வீட்டிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று படையினர் சிவில் உடையிலும் சீருடையிலும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக