வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தைக்
குறைக்க முடியாது. அந்த அதிகாரம் ஜனாதி பதிக்கே உள்ளது என்று பொருளாதார
அபிவிருத்தி அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்களின் தேவையைப் புறக்கணித்து சர்வதேச மட்டத்தில் ஒருசில தரப்புக்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கிலேயே கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்துள்ளது.
வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தைக் குறைக்க முடியாது. அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. பாராளுமன்றத்துக்குக்கூட அது தொடர்பான அதிகாரம் கிடையாது.
உண்மையில் வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றுவதாயின் கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி, வீடு, போக்குவரத்து, மின்சாரம், பல்கலைக்கழக வசதி உள்ளிட்ட விடயங்களையே முன்வைக்க வேண்டும். அதனைவிடுத்து வடக்கில் இராணுவத்தை குறைக்கப்போவதாக பிரகடனத்தில் கூறியுள்ளனர்.
இதேவேளை, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது யார் என்பதையும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக