சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

8 செப்டம்பர், 2013

முடி வெட்டுவதற்காக வந்த இஸ்ரேலிய பிரஜை அலரி மாளிகைப் பிரதேசத்தில் கைது - உளவாளியா அச்சத்தில் மஹிந்தரின் பாதுகாப்பு அதிகாரிகள்


சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வசஸ்தலமான அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட இஸ்ரேலிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்தரின் பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பிரஜையை சோதனைக்குட்படுத்த முயற்சித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொள்ளுப்பிட்டி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தியாவுடன் தொடர்புடைய இந்த இஸ்ரேல் பிரஜையை, பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோது, தான் முடி வெட்டுவதற்காக வந்ததாகவும் தவறுதலாக அலரி மாளிகைப் பிரதேசத்துக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவர் ஒரு புலனாய்வாளர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக