சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 செப்டம்பர், 2013

சீருடையினரின் ஆதரவுடன் அரச தரப்பு வேட்பாளர்.- ஓட ஓட விரட்டியடிப்பு

 
 
சீருடையினரின் ஆதரவுடன்  வெள்ளிக்கிழமை வீடு வீடாகப் பரப்புரை மேற்கொண்ட ஆளும் தரப்பு வேட்பாளர் ஒருவரை மக்கள் ஓட ஓட விரட்டினர். இந்தச் சம்பவம் நேற்று இளவாலைப் பகுதியில் இடம்பெற்றது.
வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரை நடவடிக்ககள் கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தன.
ஆயினும் இதன் பின்னரும் அரச தரப்பு வேட்பாளர்களால் தொடர்ச்சியாப் பரப்புரை நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக யாழ். மாவட்டத்தில் சீருடையினரின் ஆசீர்வாதத்துடன் ஆளும் கட்சியில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்படும் 4 வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் இரவு சீருடையினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான சுவரொட்டிகளும், மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று கோரும் சுவரொட்டிகளும் யாழ். குடாநாடு முழுவதும் ஓட்டப்பட்டிந்தன.
இதனைத் தவிர யாழ். குடாநாட்டின் பல பகுதிகளுக்கு நேற்றுக் காலை முதல் சீருடையில் சென்றவர்கள் வீடு வீடாகச் சென்று ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிகுமாறு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தமிழில் பேசுவதற்கு பெரும் சிரமப்பட்டனர்.
தேர்தல் விதிமுறைகளை மீறி சீருடையினரின் ஆதரவுடன் ஆளும் தரப்பு வேட்பாளர் ஓருவர் இளவலைப் பகுதியில் வீடுவீடாகப் பரப்புரை மேற்கொண்டார். இதன்போது அந்தப் பகுதி மக்கள் அவரை ஓட ஓட விரட்டினர். சீருடையினரின் ஆதரவுடன் அவர் அங்கிருந்து அகன்றார்.
இதேவேளை, கிளிநொச்சி நகர் கோணாவில், தருமபுரம், மருதநகர், ஊற்றுப்புலம், பூநகரி ஆகிய பகுதிகளுக்குச் சென்ற சீருடையினர் மக்களிடம் வாக்காளர் அட்டைகளின் பிரதிகளை வழங்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதேவேளை, சீருடையினர் இந்த செயற்பாடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பவ்ரல், கபே அமைப்புகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக