சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 செப்டம்பர், 2013

மகிழ்ச்சியளிக்கின்றது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்


வட மாகாணத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை சிவிலியன்களாக வருகை தந்த இராணுவத்தினால் பல பகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்ற நிலையில் தேர்தல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக