சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 செப்டம்பர், 2013

பிரான்ஸிற்கு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உத்தரவு இலங்கையரை நாடு கடத்த வேண்டாம் என

 
இலங்கைத் தமிழர் ஒருவரை நாடு கடத்த வேண்டாம் என பிரான்ஸ் அரசாங்கத்திற்கு,
ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் குறித்த இலங்கைத் தமிழரை நாடு கடத்தும் நடவடிக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் ஒருவரே இவ்வாறு பிரான்ஸில் அடைக்கலம் கோரியிருந்தார். புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காரணத்தினால் இலங்கை அதிகாரிகள் தம்மை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக குற்றம் சுத்தியுள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தாம் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் குறித்த இலங்கைத் தமிழர் பிரான்ஸில் புகலிடம் கோரியிருந்தார். எனினும், இந்த புகலிடக் கோரிக்கையை பிரான்ஸ் நிராகரித்துள்ளது. தம்மை நாடு கடத்தினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்திற்கு புறம்பான வகையில் பிரான்ஸ் தம்மை நாடு கடத்த முயற்சிப்பதாக குறித்த நபர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரையில் குறித்த நபரை நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக