சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

16 செப்டம்பர், 2013

இலங்கை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிராக தமிழகம் சென்னையில் இளைஞர் மாநாடு!!

 
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிராக தமிழகம் சென்னையில் இளைஞர் மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது இலங்கை அரசாங்கம் சுமார் 150 ஆயிரம் ஈழத் தமிழர்களை இனபடுகொலை செய்ததாக தெரிவித்து, இந்த நிலையில் இங்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவது முறையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சர்வதேச ரீதியாக சுமார் 700 பிரதிநிதிகள் கலந்துக் கொண்டிருந்தனர். இதன் போது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிராக சென்னையில் விரைவில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக