சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

7 செப்டம்பர், 2013

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அறிமுகம் !


போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில் தமிழர்களுக்கான சுதந்திரமான அரசியல் வெளி அற்ற நிலையில் ,இலங்கைத்தீவுக்கு வெளியே தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் , எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் தனது முதலாம் தவணை அரசவையினை நிறைவு செய்கின்றது.

இந்நிலையில் இரண்டாம் அரசவைக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் , ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளது.

இதற்கான பணிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில் , தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிக்கைகளை அனைவரும் அறிந்திருக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் இணையத்தளமொன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

http://tgte-ec.com/  இந்ந இணையத்தளத்தின் ஊடாக தேர்தல் தொடர்பில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் தகவல்களை நாடுவாரியாக தெரிந்து கொள்ள முடியுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக