விடுதலைப்புலிகளினதும் மற்றும் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்று
சந்தேகிக்கப்படுபவர்கள் மீதும் தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்குகளைத்
துரிதமாக விசாரிப்பதற்காக அநுராதபுரத்தில் அமைகப்பட்ட புதிய நீதிமன்றத்தை
நேற்று பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் திறந்து வைத்தார்.
மேலும் அங்கு தொடர்ந்து கருத்து
தெரிவித்த அவர் இலங்கைக்கு மனித உரிமை பற்றி யாரும் கற்பிக்கும் தேவையில்லை
எனவும் இந்த நாட்டில் உள்ளவர்கள் மனித உரிமைகளுடன் பிறந்தவர்கள் எனவும்
தெரிவித்த பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த நீதிமன்றம்
ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையர்கள் மனித உரிமைகளை
மதிப்பவர்கள் அது அவர்களிடம் உடன் பிறந்ததது இதனால் மனித உரிமைகளை
பாதுகாக்குமாறு எவரும் கூறவேண்டிய தேவையில்லை என்பதுடன் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மனித உரிமைகளை பாதுகாத்து வருகிறோம். மக்கள்
சட்டத்தை மதிக்க வில்லை என்றால் அது இறந்து போன கடிதத்திற்கு ஒப்பாகி
விடும்.
சட்டம் மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்
சரியானதையும் தவறானதையும் முதலில் வீட்டில் இருந்தே கற்பிக்க வேண்டும் அதன்
பின்னர் அது சமூகத்திற்குள் சென்று சேர்ந்து விடும் எனக்குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக