சிறிலங்காவில் ராணுவத்தினரை விட மோசமானவர்களாக பிக்குகள் உருவெடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக சிறிலங்காவில் பிக்குகளால் மேற்கொள்ளப்படு்ம் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கண்டி, குட்செட் பஸ் நிலையத்திலுள்ள மலசலகூடத்தில் வைத்து பாடசாலை
மாணவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் வசந்த குமார இன்று உத்தரவிட்டார். கண்டி நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய
மேற்படி மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக