வன்னிப் பிராந்தியத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று
கிராமங்களில் தமிழ் இனப் பரம்பலை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள்
வழங்கப்படுவதாக சமூக சிற்பிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பிராந்திய அரச
மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இந்த சம்பவம்
நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இது ஒரு
இனஅழிப்பு விடயம் ஆகும்.
வலைப்பாடு, வேரவில், கேரஞ்சி ஆகிய கரையோர கிராமங்களில் வசிக்கும்
பெண்களே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கையால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 30ம் திகதி வேரவில் பிரதேச மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள், தொண்டர்கள் ஆகியோர் குறித்த மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள குடும்பங்களில் 5 வயதான குழந்தைகளில் எடை குறைந்து காணப்பட்டால் கட்டாயம் மருத்துமனைக்கு வந்து பிள்ளையின் எடை பரிசோதித்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளனர்.
கடந்த 31 ஆம் திகதி வேரவில் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளை சேர்ந்த 20 தாதிகள் மற்றும் குடும்ப நல உத்தியோகஸ்தர்கள் மூன்று கிராமங்களில் வீடு வீடாக சென்று இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளில் தாய்மாரை அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள 43 வயதான தாயொருவர்,
தொண்டு பணியாளர் தனது வீட்டுக்கு வந்து மருத்துவ அட்டையுடன் எடை குறைந்த 5 வயது பிள்ளையுடன் வைத்தியசாலைக்கு வருமாறு கூறியதாக கூறியுள்ளார்.
எனது 5 வயது பெண் குழந்தை சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் மருத்துவமனையில் இருந்து வந்தவர்களிடம் நான் கூறினேன். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து வந்த அந்த பரிசோதனை குழுவை எனக்கு நன்கு தெரியும்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் வந்துள்ளதால் சிகிச்சை ஆலோசனைகள் சிறந்ததாக இருக்கும் என நான் கருதினேன் எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களை கருத்தடை ஊசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்களும், தாதியர்களும் நீண்டகாலம் கருத்தரிக்காது இருப்பதற்காக மருந்தை எடுத்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். நீண்டகாலத்திற்கு பின்னர் பிள்ளை பிறந்தால் அந்த குழந்தை ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஏற்கவே கருத்தடை மருந்துகளை எடுத்துள்ளீர்களா என மருத்துவர்களும், தாதியர்களும் கேட்டுள்ளனர். தான் மாத்திரைகளை எடுத்துள்ளதாக அந்த பெண்கள் கூறியுள்ளார். இந்த மருந்து மாத்திரை விட பக்க விளைவுகள் அற்ற சிறப்பான மருந்தாக இருக்கும் என தாதியர்கள் கூறியுள்ளனர்.
முதலில் சகல தாய்மாரும் இந்த புதிய கருத்தடை மருந்தை ஏற்றுக்கொள்ளாது அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருத்தடை மருந்தை போட்டுக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் இந்த மருத்துவமனையில் வேறு சிகிச்சை பெற முடியாது என்று தாதியர்கள் அச்சுறுத்தப்பட்டதையடுத்து சில பெண்கள் மருத்துவனையில் கொடுத்த அந்த ஊசி மருந்தை போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, சிறீலங்கா அரசின் இனஅழிப்பு
நடவடிக்கையின் ஒரு அங்கமாக, கட்டாய கருத்தடை ஊசி ஏற்றும் சம்பவம் கடந்த
வருடம் கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக