சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

7 செப்டம்பர், 2013

தமிழ்த்தேசியக்கூட்­ட­மைப்பைத் தவிர ஏனைய கட்­சிகள் தென்­னி­லங்கை தலை­மைத்­து­வத்தின் கீழ் போட்­டி­யி­டு­கின்­றன.

 
வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தென்னிலங்கை தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுகின்றன .
தென்னிலங்கைத் தலைமைகளின் கீழ் போட்டியிடும் கட்சிகளுக்கு அதன் தலைமைகள் எதனையும் பேசுவதற்கு அனுமதித்துள்ளதெனினும் செயற்படுவதற்கு உரிமையில்லை என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் . மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார் .
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி . தர்மலிங்கம் அவர்களின் 28 ஆவது வருட நிறைவை முன்னிட்டு தாவடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவுத் தூபிக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது .
 
இதன்பின்னர் இடம்பெற்ற நினைவுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார் .
 
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
எனது தந்தையார் மறைந்து இன்றுடன் 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளன . அவரது அரசியல் வாழ்க்கையில் மாற்றுக் கட்சிகளுடன் நட்புறவாகப் பழகியதை நான் கண்டுள்ளேன் . அந்த வகையில் அவரது செயற்பாட்டினை நானும் கொஞ்சம் பெற்றுள்ளேன் .
 
தனிப்பட்ட முறையில் நட்புறவுடன் பழகும் செயற்பாட்டை தற்போது காணமுடிய வில்லை . தற்போது வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகள் தென்னிலங்கை தலைமைத்துவத்துடன் செயற்படுபவை . இவர்கள் எதைச் சொன்னாலும் இவர்களால் அவற்றை செயற்படுத்த முடியாது . இதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைமைத்துவம் இவர்கள் எதையும் கூறி வாக்குகளைப் பெற அனுமதித்துள்ள போதிலும் இவர்கள் கூறியவற்றை செயற்படுத்துவதற்கு இவர்களுக்கு உரிமையில்லை .
 
தற்போது வடக்கில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் கூட அரச பின்னணியில் உருவாக்கப்பட்டு போட்டியிட வைக்கப்ப ட்டுள்ளன . தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக இவை களமிறக்கப்பட்டுள்ளன . இச் சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோரில் பலருக்கு தாம் எதற்காக போட்டியிடுகிறோம் என்ற தெளிவுகூட இல்லை .
 
இவ்வாறான நிலையில் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தலைமைத்துவத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது .
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் துன்பங்களிலிருந்து மீள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழ் தலைமைத்துவத்திற்கு வாக்களிக்க வேண்டும் . அதற்கான பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உண்டு என்று தெரிவித்துள்ளார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக