ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் பரீட்சார்த்த
பயணமொன்று நெற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திலேயே இந்த பரீட்சார்த்த
பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார்
வெல்கம, ரயில்வே பொது முகாமையாளர் டீ.ஏ.பி.ஆரியரத்ன மற்றும் வடக்கு ரயில்
பாதை நிர்மாணப்பணிக்கு பொறுப்பான இந்தியாவின் ஐகோன் நிறுவனத்தின் இலங்கை
முகாமையாளர் எஸ்.எல்.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த பயணத்தில்
இணைந்துகொண்டனர்.
இந்த பயணத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
இந்த பயணத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக