தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி அரசுடன்
இணைந்தார் எனவும் தேர்தலை தமிழரசுக் கட்சி புறக்கணிக்கின்றது என்ற
செய்தியுடனும் யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிக்கையின் பெயரில்
போலியான பிரசுரமொன்று யாழ்ப்பாணத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி போலி பத்திரிக்கையானது யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று காலை விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் உண்மையான உதயன் பத்திரிக்கை வெளியான பின்னர் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் மக்களை குழப்பும் நோக்கில் விஷமிகளினால் இச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக