முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரானதேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த 1-1 முகாமிலுள்ள
நிலத்தடி வீடு சிங்கள இராணுவத்தினரால் இன்று மாலை 6 .41 மணிக்குக்
குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. மேற்படி வீட்டினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பதுங்கு
குழிகளையும் யுத்தத்தின் பின்னர் போர் நினைவுச் சின்னங்களாக
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் பெருமளவு சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள், புலிகள்
அதியுச்ச போர் மற்றும் போருக்கான தந்திரோபாயங்களை இவ் வீட்டில் கண்டு
வியந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த இடங்களுக்குச்
செல்லவோ, பார்வையிடவோ இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதற்கு இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாக காரணம்
காட்டப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை குறித்த பிரதேசத்தில் மிகப் பெரும்
வெடிச்சத்தம் கேட்டதாகவும் தலைவரின் இல்லிடம் தகர்கப்பட்டதாகவும் பிரதேச
மக்கள் கூறினர்.
வெடிச்சத்தத்தின் பின்னர் பாரிய புகை மூட்டம் குறித்த வீடு அமைந்துள்ள
பகுதியிலிருந்து எழுந்ததாக புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில்
பயணித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
புலிகளின் தலைவரின் 1/1 முகாமிலுள்ள வேனாவில் வீடு பாரிய சத்தத்துடன் சற்று முன்னர் தகர்ப்பு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த இடம் திட்டமிட்ட வகையில் இலங்கை இராணுவத்தால் தகர்ப்பு
புதுக்குடியிருப்பிற்கும் ஒட்டிசுட்டானுக்கும் இடையில் வேனாவில்
பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைமை வசித்ததாகக்
கூறப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் காலத்தில் சரித்திர முக்கியத் துவம்
வாய்ந்த இடமாகவும் கருதப்பட்ட இடம் இன்று மாலை 6.41 மணியளவில் இலங்கை
இராணுவத்தால் திட்டமிட்ட வகையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இவ் விடு புலிகளின் தலைவர் வசித்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளதுடன்
நிலத்திற்குக் கீழ் மூன்று மாடிகளைக் உடைய கட்டட அமைப்பும்
காணப்படுகின்றது.
இச்சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னதாக 5.30 மணியளவில் இவ் வீட்டை
அன்டியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் இச்சம்பவம் இடம் பெற்ற வேளை
மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்து விட்டு இவ்வாறான வேலைகளில்
இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக