வடக்கு மாகாணசபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் , முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் நில ஆக்கிரமிப்பு உச்ச வேகத்தில்
நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மக்கள் , கொக்குத்தொடுவாய்
கிராமத்தில் புதிதாக 2 ஆயிரம் ஏக்கர் தமிழர் நிலம் அபகரிக்கப்படுவதாக கவலை
வெளியிட்டுள்ளனர் .
2009 ம் ஆண்டின் பின்னர் மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த
தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு விவசாய நிலம் சிங்கள
குடியேற்றவாசிகளால் அரசாங்க ஆதரவுடன் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் ,
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
வெற்றி பெற்றதன் பின்னர் , மேற்படி எல்லைக் கிராமங்களில் மீதமாகவுள்ள
தமிழர் நிலங்களும் மிக வேகமாக அபரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர் .
இதன்படி கடந்த வாரம் முதல் கொக்குத்தொடுவாய் கிராமத்தில் 1974 களில்
படித்த வாலிபர்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட விவசாய நிலம் ,
யுத்தத்தின் பின்னர் கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த
நிலையில் தற்போது அவை சிங்கள குடியேற்றத்திற்காக துப்புரவு செய்யப்பட்டுக்
கொண்டிருக்கின்றன .
இதன்படி சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் இலக்க தகடுகள் பொறிக்கப்பட்டு
காடுகள் கனரக வாகனங்கள் மூலம் துப்புரவு செய்யப்படுவதாக கூறப்படுகின்றது .
இந்நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து . ரவிகரன் சம்பவம்
தொடர்பில் அறிந்து மேற்படி பிரதேசத்திற்குச் சொந்தமான தமிழ் மக்களுடன்
அங்கு சென்று நிலமைகளை அவதானித்துள்ளதுடன் , சம்பவத்தை உறுதிப்படுத்தியும்
உள்ளார் .
அவர் கூறுகையில் , கண்ணிவெடி அபாயமுள்ள பிரதேசமாக மேற்படி பிரதேசம்
அறிவிக்கப்பட்டிருந்தமையினால் , நிலத்திற்குச் சொந்தமான மக்கள் அங்கு செல்ல
முடியாத நிலை காணப்பட்டது .
மேலும் இதனால் மீள்குடியேறிய மக்கள் பலத்த வாழ்வாதார
நெருக்கடியினையும் எதிர்கொண்டிருந்தார்கள் . இந்நிலையில் தற்போது அவை
சிங்கள குடியேற்றத்திற்காக தயார் படுத்தப்படுவதாக கூறியுள்ள அவர் ,
கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசத்தில் எவ்வாறு ஆட்கள் , மற்றும் வாகனங்கள்
செயற்படுகின்றன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக