சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

5 அக்டோபர், 2013

பிரான்ஸ் பாரிஸில் ஒரு தந்தையும் அவரது 2 மகன்களும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளனர்.


 
ஒரு தந்தையும் அவரது 23 மற்றும் 32 வயதுடைய மகன்களும் இன்று வெள்ளிக்கிழமை 14h10 மணியளவில் வில்லியே லூ பெல்  (Villiers-le-Bel - Val-d’Oise) இல் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளனர். இவர்கள் rue d’Hérivaux இல் பள்ளிவாசலுக்கருகில் ஒரு சிற்றுந்தினுள் இருந்துள்ளனர். முதற்கட்டத் தகவலின் படி இவர்கள் மீது சிற்றுந்துருளியில் (Scooter) வந்த ஒருவர் நான்குமுறை துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
11.43 அளவு குண்டுகளை உடைய பெரிய துப்பாக்கியினாலே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். ஆனால் எந்தக் குண்டும் பள்ளிவாசற்பக்கம் திருப்பப்படவில்லை எனவும் இது தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடந்ததாகவும் நீத்தித்துறையினர் தெரவித்துள்ளனர். சுடப்ப்பட்டவர்கள் பள்ளிவாசலிற்குத் தொழுகைக்காக வந்து விட்டுத் திரும்பிய வேளையிலேயே சுடப்பட்டுள்ளனர். இது ஒரு பழிவாங்கல் அல்லது கணக்குத் தீரத்தல் சூட்டுச் சம்பவமாகவே உள்ளது என Val-d'Oise நிர்வாகத்துறைத் தலைவர் (Préfet) Jean-Luc Nevache தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிவாசலுக்கருகில் இச்சம்பவம் நடந்திருந்தாலும் இதற்கும் பள்ளிவாசலிற்கும் எந்தத் தொடர்பும் இல்லலை எனவும் உறுதிப்படுத்தி உள்ளார்.
 
 
படுகாயத்திற்குள்ளான இரு சகோதரர்களில் ஒருவர் உயிர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது. இடுப்பிலே காயமடைந்த ஒரு சகோதரன் Beaujon (Clichy -Hauts-de-Seine) வைத்தியசாலைக்கும் மற்றையவர்  Gonesse வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 
 
இதில் ஒருவர் ஏற்கனவே காவற்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருபவரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவரும் ஆவார். மற்றையவர் வேறு இடத்தில் இருந்து விட்டுக் குடும்பத்தினருடன் இணைவதற்காக வந்திருந்தவர் ஆவார். இதனால் இவர்களிற்குச் சிகிச்சை அளிக்கும் வைத்திசாலைகளிற்கும் காவற்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திலும் காவற்துறையினரின் கண்காணிப்பு இருந்தாலும் அங்கு அமைதியே நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.        
 
மூன்றாவதாகக் காயடைந்த வயதானவரான தந்தைக்குக் கண்ணாடிச் சிதறல்களாலேயே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சார்சல் உதவி நிர்வாகத் தலைவர் (sous-préfet), பொந்துவாஸ் அரசதரப்பு நீதித்துறை வழக்கறிஞர், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளரும் வந்திருந்தனர். விசாரணைகள் தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக