வடக்கில் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட
மாட்டாது என அரசாங்கம் நோர்வே அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது.
வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும்
முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, இலங்கைக்கான
நோர்வே தூதுவர் ஜீ.லோச்சனுக்கு உறுதியளித்துள்ளார். வடக்கில் நடைபெற்ற
தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்றது என்பதனை சர்வதேச சமூகம்
ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில்
வெற்றியீட்டிய காரணத்தினால் வடக்கு அபிவிருத்திப் பணிகள் முடங்கி விடும்
என்ற வதந்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு
அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முடிவுறுத்திக்கொள்ளாது என அவர்
தெரிவித்துள்ளார். வடக்கும் இலங்கைக்கும் சொந்தமானதே என அவர்
தெரிவித்துள்ளார்.
வடக்கின் அபிவிருத்திக்காக முடிந்தளவில் பாடுபடப் போவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக