அடங்காத்
தமிழன் தமிழ்தேசிய தந்தை பாவலலேறு பெருஞ்சித்தனார் மகனும் தமிழ்த்தேசிய
விடுதலைப் போராளியும், ”தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின்”
முன்னால் பொதுச்செயலருமான தோழர் பொழிலன் அவர்கள் பத்து ஆண்டுகள்
சிறைத்தண்டனை கழித்து விடுதலையாகி வெளிவந்த செய்தி தமிழ் தேசியத்தை
போற்றும் ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழ் உணர்வாளர்களையும்
மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
விடுதலை செய்யக் கோரி வழக்கு போடப்பட்ட பல முறையீடுகளையும் தொடர்ந்து தற்போது உயர் நீதி மன்றத்தில் அவர் விடுதலை ஆகி உள்ளார் என அறிகின்றோம்.

தமிழினத்தின் மிகச் சிறந்த இனப்போராளிகளில் ஒருவரான பொழிலன் அவர்கள்
சிறையிலிருந்து வெளிவந்தபோது சென்னை புழல் சிறைவாசாலில் த்மிழின
உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி அவரை வரவேற்று பறை அடித்து ஆடிப்பாடி
மகிழ்ந்தார்கள் என அறிகின்றோம். மட்டற்ற மகிழ்ச்சி. அவரை வரவேற்க பல
தமிழ்த்தேசிய தலைவர்கள்,அறிஞர்கள் வந்திருந்தனர் எனவும் அறிகின்றோம்.
போராட்டங்கள் என்பது வெறுமனே ஓரிடத்தில் கூடி கலைவது மட்டுமில்லை என்பதை
நன்கு உணர்ந்தவர்கள் தோழர் பொழிலன் அவர்கள் போன்ற செயன்முறைப் போராளிகள்.
கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கு, கிண்டி கத்திபாரா நேரு சிலை
வெடிகுண்டு வழக்கு, ஊட்டி பூங்கா வெடி குண்டு வழக்கு என பல்வேறு வழக்குகள்
நிமித்தம் கைது செய்யப்பட்ட தோழர் பொழிலனுக்கு திண்டுக்கல் நீதிமன்றம்
ஆயுள் தண்டனை வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. அதன்
பின்னர் உச்ச நீதிமன்றம் 10 வருடங்களாக தண்டனையை குறைத்தது. பல வருடங்களாக
சென்னை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர் பொழிலன் அவர்களை
விடுதலை செய்யுமாறு
உயர்நீதிமன்றம் இப்பொழுது உத்தரவிட்டுள்ளது. தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரின் மகனான தோழர் பொழிலன் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருபவர். அவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதன் மூலம் அவரது விடுதலைப் போராட்டத்தை நசுக்கலாம் என இந்திய அரசு நினைத்தது. ஆனால் இன்று தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு மாபெரும் மக்கள் எழுச்சியாக வளர்ந்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்ற ஈழத்தமிழின அழிப்பில் இந்தியம் முன்னின்று கட்டவிழ்த்த தமிழின அழிப்பும் இதற்கு ஒரு காரணம். அத்தோடு தமிழகத்திலும் தமிழர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் புறக்கணிப்புகள மொழி தேசிய இன உணர்வு சிதைப்புகள் என பலப் காரணங்களும் உண்டு. இவற்றை கடந்து தமிழர்கள் தமது அடையாளங்களை வரலாற்றை உணர்ந்து தாம் தனித்துவமான தேசிய இனம் தனி தேசங்களை ஆண்ட இனம் என உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதே மாபெரும் உண்மையாக உள்ளது.
.
வழக்கறிஞர் பாவேந்தனோடு ஐயா பெருஞ்சித்திரனாரின் மனைவி அம்மா தாமரையம்மையார், ஐயா பாவலரேறு , பெருமகனார் இறைக்குருவனார் ஆகியோரின் நினைவிடங்களுக்கு தோழர் பொழிலன் சென்றிருக்கிறார். தமிழ்க்களத்தில் அவர் தன் இனப்பணியை மீண்டும் எழுச்சி குன்றாமல் தொடர்வார் என தமிழர்கள் அனைவரும் எதிர்பார்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக