சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 அக்டோபர், 2013

தீவக அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயேயுள்ளன - தீவகத்திலிருந்து வெளியேறும் ஈபிடிபி!


யாழ்.குடநாட்டின் தீவகப்பகுதிகளிலிருந்து ஈபிடிபியின் பிரமுகர்கள் பலரும் தமது குடும்பங்களை வெறியேற்ற தொடங்கியுள்ளனர்.தமது கோட்டையாக அவர்கள் கருதி வந்த தீவகப்பகுதியினில் கடந்த மாகாணசபை தேர்தலினில் ஏற்பட்ட படுதோல்வியால் ஈபிடிபி தலைமை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதையடுத்தே தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற ஈபிடிபியின் தலைமைகள் முடிவு செய்துள்ளன.
பெரும்பாலான ஈபிடிபியினது தீவக அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயேயுள்ளன.மக்கள் அவர்களது அலுவலகங்களிற்கு செல்வதும் நின்று போயுள்ளது.ஈபிடிபி தனது அஸ்தமனத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆதரவாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. குறிப்பாக கடந்த காலங்களினில் தமது வாகனங்களை தீவகப்பகுதிகளினிலேயே கூடுதலாக தரித்து வைத்திருந்த ஈபிடிபியினர் தற்போது அவற்றை யாழ்.நகரின் சிறீதர் தலைமையகத்தினில் தரித்து வைக்க தொடங்கியுள்ளனர்.நடந்து முடிந்த மாகாணசபை தேர்தல் வாக்களிப்பினில் தீவகப்பகுதிகளினில் கூட்டமைப்பு கூடிய வாக்குகளை பெற்று ஈபிடிபியை பின் தள்ளியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக