சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 அக்டோபர், 2013

விக்கி­னேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் ஜனா­தி­பதி விரித்த வலையில் விழுந்­து­விட்­டார்கள் என பிரி­வி­னை­வா­திகள் நினைத்தால் அது அவர்­களின் முட்­டாள்­த­ன­மாகும்- மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் விருப்­பத்தை ஏற்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு ஜனா­தி­பதி பதவிப்பிர­மாணம் செய்து வைத்­த­மை­யா­னது அர­சாங்கம் செய்த மிகச் சிறந்­த­தொரு அர­சியல் நட­வ­டிக்­கை­யாகும். வடக்கு மக்­களின் உணர்­வு­களைப் புரிந்து அர­சாங்கம் செயற்­ப­டு­மானால் அதை நாம் வர­வேற்­கின்றோம் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்­துள்ளார்.
 
விக்கி­னேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் ஜனா­தி­பதி விரித்த வலையில் விழுந்­து­விட்­டார்கள் என பிரி­வி­னை­வா­திகள் நினைத்தால் அது அவர்­களின் முட்­டாள்­த­ன­மாகும் எனவும் அவர் தெரி­வித்தார்.
 
இது தொடர்­பாக அஸாத் சாலி தொடர்ந் தும் தெரி­விக்­கையில்,
 
சி.வி.விக்கி­னேஸ்­வரன் ஜனா­தி­பதி மஹிந் தராஜ­பக் ஷ முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்­த­மை­யா­னது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஜன­நா­யக செயற்­பாட்­டினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. அதேபோல் அர­சாங்கம் இந்த கால கட்­டங்­களில் செய்த மிகச்­சி­றந்த அர­சியல் செயற்­பா­டாகும்.
 
அதே­போன்று வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு அவர்­களின் உணர்­வு­களைப் புரிந்து அர­சாங்கம் செயற்­பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் இட­ம­ளித்து வடக்கு மக்­களின் உரி­மை­களை அங்கீகரித்து தடை­க­ளின்றி அவர்களை செயற்பட விட்டால் அதை அனை­வரும் வர­வேற்­பார்கள்.
 
மேலும், விக்கி­னேஸ்­வரன் ஜனா­தி­பதி முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்­தமை ஜனா­தி­ப­தியின் வலையில் விக்­னேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் விழுந்­து­விட்­ட­தாக பலர் நினைத்து விமர்­சிக்­கின்­றனர்.குறிப்­பாக அரச ஊட­கங்­களும் பிரி­வி­னை­வாதக் கட்­சி­களும் விமர்­சிக்­கின்­றன. ஆனால் இச் செயற்­பா­டா­னது அர­சியல் புரிந்­து­ணர்­வையும் தேசிய நல்லிணக்­கத்­தையும் நோக்­கி­ய­தான மிகச் சரி­யா­ன­தொரு நகர்­வென்­பதே உண்மை.
 
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­ப­குதி மக்­க­ளுக்­காக அர­சுடன் இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பட முன்­வந்­துள்­ளதைப் போன்று அர­சாங்­கமும் கூட்­ட­மைப்­புடன் இணைந்து புரிந்­து­ணர்வு, விட்டுக் கொடுப்­புடன் வடக்கு வாழ் மக்­களின் வாழ்க்­கைக்­காக அவர்­களை சூழ்ந்­துள்ள இருளை துடைத்­தெ­றிய முன்­வர வேண்டும்.
 
அதே­போன்று இன்று அமைச்­சர்­களின் பாது­கா­வ­லர்­களும் இணைப்­பா­ளர்­களும் கடத்­தப்­படும் நிலைக்கு நாட்டின் சட்டமும் பாதுகாப்பும் சீர் குலைந்துள்ளன. நாட்டில் பொலிஸ் பாது­காப்பு இருந்தும் அவற்றில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்ற நிலைமையே இன்று காணப்படுகின்றது. இதனால்தான் சுயாதீன பொலிஸ் ஆணைக் குழு மற்றும் 17 ஆவது சீர்திருத்தம் என்ப வற்றை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக