சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 அக்டோபர், 2013

விதன்டா வாதத்தை விட்டு! தமிழனை காக்குமா புதிய வடமாகாண சபை: ஜே.எஸ்.திசநாயகம்

செப்டம்பர் 21ல் நடைபெற்ற வட மாகாணசபை தேர்தல்களில் ஒரு வசீகரமான பெரும்பான்மையை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையைக் கொண்டு கூடுதல் சுயாட்சியை கோரப்போவதாகக் கூறுகிறது.
ஆனால் சுயாட்சியை வெறுமே பிரிவினை என்று முத்திரை குத்தி அதனை கடுமையாக ஸ்ரீலங்கா அரசாங்கம் எதிர்த்து வருகிறது, எனவே தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையில் என்ன செய்யப்போகிறது என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.
மாகாணசபைகளை நிறுவுவதற்கான சட்டங்கள், இந்தோ – லங்கா எனும் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும்; இடையில் ஏற்பட்டதை தொடர்ந்து 1988ல் அறிமுகப் படுத்தப்பட்டிருந்தாலும், வட மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுவது இதுதான் முதல்முறை. அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தத்தின்படி மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரத்தை பங்கீடு செய்யும்; வகையில் அதிகாரப் பரவலாக்கத்தை வடிவமைத்து மாகாணசபைகள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
மே 2009ல் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இராணுவத் தோல்வியுடன், மனித உரிமை மீறல்களையோ அல்லது தமிழர்களுக்கு எதிரான பாகுபாடுகளையோ நீக்குவதற்கான முயற்சிகள் வெகு அரிதாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன,
ஸ்ரீலங்காவாசிகள் மற்றும் சர்வதேச சமூகம் என்பன மாகாணசபைகள் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும்படி சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் தமிழ் மக்களும் அதற்கு ஆதரவளித்தபோதும் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு உண்மையான அதிகாரத்தை பங்கிடும் முறைக்கு பெருமளவு பற்றாக்குறையாக உள்ளது என்பது வெகு தெளிவாக உள்ளது.
இந்தப் பிரச்சினையின் அடிவேர் ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பில் உள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்புகள் மூலம் மாகாணசபைகளுக்கு விரிவாக்கப்பட்டுள்ள அதிகாரப்; பரவலாக்கத்தை மத்திய அரசாங்கம் கட்டுப்படுத்தி மகிழ்கிறது.
சிங்கள ஆதிக்கத்தின் கீழுள்ள கொழும்பு அரசாங்கம் தேர்தலுக்கு முன்னரே அதிகாரப் பரவலாக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளமை இந்தக் கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. அதில் ஒன்று சபைகளுக்கு ஏற்கனவே பரவலாக்கப்பட்டிருந்த காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களின் பயனை தடை செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இரண்டாவதாக மாகாணசபைகளைப் பாதிக்கும் சட்டமூலங்களை அமுல் படுத்துவதற்கு கொழும்புக்கு அனைத்து மாகாணசபைகளினதும் சம்மதம் தேவையில்லை என்கிற சட்டத்திருத்தத்தை திணிக்க முயலுகிறது.
இந்த சர்ச்சையான சூழ்நிலையில்தான் தேர்தலுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி.விக்னேஸ்வரனின் விநோதமான அறிக்கை வெளிவந்தது. ஸ்ரீலங்காவில் வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகை ஜூலை 17ல் நடத்திய ஒரு நேர்காணலில், அரசாங்கம் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை குறைப்பதற்கு எடுத்துவரும் முயற்சிக்கு பதிலளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்று அவரிடம் கேட்கப்பட்டது. 13வது திருத்தத்தின் கீழ் பரவலாக்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வில் குறைபாடு உள்ளதாக ஏற்றுக்கொண்ட விக்னேஸ்வரன் ‘எனது கருத்து என்னவென்றால் இதுவரை வட மாகாணத்துக்கென ஜனநாயக நிறுவனம் ஒன்று இருந்திருக்கவில்லை, எனவே குறைந்த பட்சம் 13வது திருத்தத்தின் கீழாவது நாங்கள் அதை நிறுவுவோம். அதன்பின் ஒலிவர் டுவிஸ்ட்டின் கதையில் வருவதுபோல எங்களால் இன்னும் கொஞ்சம் கேட்க முடியும்” என்று பதிலளித்திருந்தார்.
ஆனால் கேள்வி என்னவென்றால்: குறிப்பாக வட மாகாணத் தமிழர்களும் மற்றும் பொதுவாக ஏனைய தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து என்னத்தை எதிர்பார்க்கிறார்கள், சுய மரியாதையை இழந்து இன்னும் கொஞ்சம் தாருங்கள் என்று மன்றாடுவதால் விளைவுகளில் ஏதாவது பலனைத் தரப்போகிறதா.
அப்படி ஏதாவது இருந்தால், அரசாங்கம் – தமிழர்கள் இடையே உள்ள உறவு ஜூலை 17ல் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கைக்கும் இன்றைய நிலைக்கும் அதிகம் தள விளைவுகளை உண்டாக்கும் நிலைக்கு மாறியுள்ளது.
எடுத்துக்காட்டாக செப்டம்பர் 27ல் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி காணிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம்; மத்திய அரசாங்கத்திடமே தங்கியுள்ளது. மாகாணசபைகளிடம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் கருத்து வடமாகாணசபைக்கு காணி; விநியோகத்தில் அதிகாரம் இல்லையானால், அரசாங்கம் வடக்கில் பொறுப்பற்ற விதத்தில் காணிகளை கபளீகரம் செய்வதை மட்டுப்படுத்த முடியாமல் போகும் என்பதையே குறிக்கிறது.
ஆனால் மிகவும் முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், கொழும்புடனான ஒரு ஒற்றையாட்சி முறையின் கீழ்; அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது போதாது என்பதற்கு ஒரு திறந்த ஒப்புகை இருந்தது. இது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் கூட்டாட்சி கட்டமைப்பு மற்றும் பகிரப்பட்ட இறையாண்மை என்பதன் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்று திட்டவட்டமாக வகுக்கிறது.
ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னும் இராணுவத்தின் தலைமையின் கீழ் மக்களை பீதியடைய வைக்கும்;; அரசியல் அடக்கு முறைகளினால் தமிழர்கள் விரக்தி அடைந்துள்ளார்கள். அடக்குமுறையின் கீழ் அகப்பட்டுள்ள தமிழர்களின் பொறுமை விரக்தியின் விளிம்புக்கே அவர்களை கொண்டு சென்றுள்ளது. ஒரு சமீபத்தைய உதாரணமாக கடந்த ஆகஸ்ட்டில் காணாமற் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களை ஐநா மனிpத உரிமைகளின் உயர் ஸ்தானிகர் நவி பிள்ளையை சந்திக்கவிடாமல் தடை செய்தபோது பொதுமக்கள் சீற்றமடைந்த நிகழ்ச்சியை குறிப்பிடலாம்.
யூ ரியுப் காணொளிகள் பொதுமக்கள் தவிர்க்க முடியாத உடல் உபாதைகள் ஏற்படுவதையும் பொருட்படுத்தாமல்; அச்சமின்றி காவல்துறையினருக்கு சவால் விடுத்தார்கள், என்பதை காண்பிக்கிறது ஏனெனில் அவர்களின் தேவைகள் கேட்கப்படவேண்டியது அவர்களுக்கு பெரிதாக இருந்தது. எனவே உள்ளுக்குள் கோபத்தை அடக்கி வைத்திருக்கும் மூர்க்கமான தமிழ் பொதுமக்களைத்தான் வட மாகாணசபை அங்கத்தவர்கள் கையாளவேண்டியிருக்கும். ஒரு பக்கத்தில் பொதுமக்கள் தாங்கள் தெரிவு செய்த பிரதிநிதிகளிடம் இராணுவம் மற்றும் அரசாங்க அதிகாரிகளினால் தங்கள்மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கான பதிலை கோருவார்கள். பொதுமக்களின் சீற்றத்தை தணிக்கும் வகையில் இயல்பான, நம்பகமான பதில்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்க வேண்டும்.
அதே நேரத்தில், சுய நிர்ணயம் மற்றும் இறையாண்மை பகிர்வு என்பனவற்றின் அடிப்படையிலான அரசியல் தீர்வில் தீவிரமாக இருக்குமாயின் அதை அடைவதற்கு நெஞ்சழுத்தமிக்க அரசாங்கம் மற்றும் ஆளும் சிங்கள வர்க்கம் என்பனவற்றின் தடைகளைத் தாண்டவேண்டியிருக்கும். அதற்குவேண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுமக்களை எதிர்ப்பு, வேலை நிறுத்தம், மற்றும் சட்டமறுப்பு நடவடிக்கைகள், என்பனவற்றின் மூலம் அணி திரட்டவேண்டி இருக்கும். சர்வதேச சமூகத்தின் ஆதரவு மற்றும் இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் மற்றும் தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் ஒருங்கிணைப்பு என்பன அதற்கு தேவையாக இருக்கும்.
எல்லாவற்றிலும் மேலாக வட மாகாணத்தில் உள்ள வாக்காளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்ததின் மூலம் ஒரு நிலையான மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்துள்ளார்கள்.
கேள்வி என்னவென்றால் இந்த சக்திகள் யாவற்றையும் உற்பத்தி முனைகளை நோக்கி வழி நடத்தக்கூடிய ஒரு தலைவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கமுடியுமா என்பதுதான். அதற்கு ஒலிவர் டுவிஸ்ட்டை விட அதிகம் செயற்பட வேண்டும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக