தமிழ் மக்களின் விடுதலைக்காக முன்னாள் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனை முதலமைச்சராகக்
கொண்ட அமைச்சரவையும் எமது வடமாகாண சபையும் கடுமையாக உழைக்கும் என்பதை
உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வடமாகாண சபையின் சுகாதாரம்
மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ப . சத்தியலிங்கன் தெரிவித்தார் .
வடக்கு மாகாண சபையின் சுகாதாரம் வடமாகாண சபையின் வைத்தியத்துறை
அமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் நேற்று முன்தினம் தனது
அமைச்சுப் பதவியை யாழ் . பண்ணை வீதியி லுள்ள அமைச்சின் செயலாளர் அலுவல
கத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற் றுக் கொண்டதன் பின்னர் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகை யில் ,
இந்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சானது நாட்டிலுள்ள சகல மாகாண சுகாதார
அமைச்சுக்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவதற்கு என்னுடைய முழு
உழைப்பையும் ஒத்துழைப்பையும் நல்குவதற்கு நான் தயாராகவுள்ளேன் .
அதற்கு நிச்சயமாக உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பும் அனுசரணையும்
எமக்குத் தேவையாகவுள்ளது . முன்னைய காலத்தில் ஆளுநரின் ஊடாக இந்த மாகாண
த்தில் நிர்வாகம் நடைபெற்று வந்தது .
எதிர்காலத்தில் மாகாண அமைச்சின் ஊடாகவும் மாகாண சபையின் அனுமதியுடனும் சில காரியங்களை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இதனை ஒரு பிரச்சினையாக நீங்கள் கருத வேண்டாம் . இந்த மாகாண அமைச்சும்
அமைச்சரவையும் அந்தக் கருமங்களை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதை
தெரிவித்துக் கொள்கின்றேன் .
ஏதாவது தடைகள் ஏற்படின் எந்தவித தயக்கமும் இன்றி என்னுடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய முடியும் .
அத்தோடு சொந்த விருப்பு வெறுப்புக்களை மறந்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சேவை செய்ய அனைவரும் முன்வரவேண்டும் .
மேலும் தமிழ் மக்களின் விடுதலைக் காகவும் மாகாணத்தின் முன்னேற்றத்திற்
காகவும் வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை கட்டாயமாக உழைக்கும் என்பதை
உறுதிபடத் தெரிவித்துக் கொள் கின்றேன் என்றார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக