வட மாகாணசபையின் பிரதிநிதிகளுக்கான பிரதான அமர்வுக்கட்டடத்தினை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் திறந்து வைக்க மாகாணசபையின் பிரதம
செயலாளர் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுமார் 450 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கைதடியில் கட்டப்பட்டு வரும்
பிரதிநிதிகள் சபைக்கான அமர்வுக் கட்டடத்தின் முதலாம் தளம் அவசர அவசரமாக
கட்டி முடிக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த புதிய கட்டட தொகுதியிலேயே வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு
நடைபெறவுள்ள வெள்ளிக்கிழமையன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் திறந்து
வைக்க மாகாணசபையின் பிரதம செயலாளர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி
முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் கவனத்திற்கு சென்றுள்ளது. அமைச்சரால்
விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரிலேயே திறப்பு விழாவை அவர்மூலம் திறந்து
வைக்க அதிகாரிகள் முயற்சித்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே குறித்த திறப்பு விழா நிகழ்வு தொடர்பான ஏற்பாடுகளின் ஓர்
அங்கமாக திறந்து வைக்கவிருந்த கல்வெட்டு தயாரிப்பில் அதிகாரிகள்
ஈடுபட்டிருந்த வேளையில்; திறப்பு விழா ஏற்பாடுகளிற்கு தடைபோட்ட முதலமைச்சர்
சீ.வி.விக்கினேஸ்வரன் முதலாவது அமர்வு தொடர்பான ஏற்பாடுகளை மட்டும்
முன்னெடுக்க அதிகாரிகளிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிகழ்விற்கு
வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியும் செல்லவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா மூலம் கட்டடத்தை திறந்து வைக்க அவரும் ஆலோசனையினை
வழங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
வடக்கில் அரச கட்டடங்களை திறந்து வைக்கும் பாரம்பரிய போட்டி ஒன்று தொடர்வது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக