யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம்
இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது .
வடக்கு மாகாண சபைக்கென 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு
வரும் புதிய கட்டடம் இன்றைய தினம் வைபவ ரீதியில் வடமாகாண முதலமைச்சர் சி .
வி விக்கினேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ . ஏ சந்திரசிறி ஆகியோர்
இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர் .
இதேவேளை வைத்திய செலவுக்காக உதவித் தொகையினைக் கோரியிருந்த 55
பேருக்கு காசோலையினையும் வழங்கி வைத்தனர் . இந்த நிகழ்வில் வடக்கு மாகாண
சபை அமைச்சர்கள் , உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் . இதேவேளை காலை 9.30 மணிக்கு வடக்கு
மாகாணசபையின் கன்னியமர்வுகள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக