வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அலகினை
அமைப்பதே எமது மக்களின் கனாவகவுள்ளதால் தமிழரின் தாகம் தமிழீழத்
தாயகம் எனத் தெரிவித்த வடமாகாகண சபையின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமான எம் . கே சிவாஜிலிங்கம் , தமிழ் மக்களுக்கும் உள்ளக
சுயாட்சியுடனான தீர்வினை வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசாங்கம் விளங்கிக்
கொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தினை வழங்க மத்திய
அரசாங்கம் மறுக்குமாயின் கிழக்குத் தீமோர் , தென்சூடான் , கொசோவா
போன்று நாமும் தமிழீழத்தில் ஆட்சி அமைக்க வேண்டியேற்படும் எனவும்
தெரிவித்தார் .
வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று நடைபெற்றபோது அந்த அமரிவில்
தனது கட்சியின் சார்பில் உரையாற்றும் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக