சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

7 அக்டோபர், 2013

வீரகேசரிபத்திரிகையின் முன்னாள் பிரதமஆசிரியருமான செல்லையா நடராஜாஅவர்கள் காலமானார்.

இலங்கையின் மிகச் சிறந்த தமிழ்ப்பத்திரிகையாளர்களின் ஒருவரும் பத்திரிகைத் துறை
முன்னாள் பிரதமஆசிரியருமான செல்லையா நடராஜாஅவர்கள் காலமானார் .
சுமார் 45 வருடங்கள் பத்திரிகையாளராகச்செயற்பட்ட அவர் தமிழ்ப் பத்திரிகைத்துறையின் பல முக்கியஸ்தர்களை பயிற்றுவித்தவராகவும் திகழ்ந்தார் . பத்திரிகையின் பல மட்டங்களிலும் பணியாற்றிய இவரால் பயிற்றுவிக்கப்பட்ட பல செய்தியாளர்கள் உலகின் பல இடங்களிலும் இன்று பணியாற்றுகிறார்கள் .
 
இலங்கையின் இனக்கலவரக் காலம் பலவிதமான அரசியல்சிக்கல்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க்காலகட்டம் ஆகியவற்றின்போது வீரகேசரி பத்திரிகையை தொடர்ச்சியாகச் செயற்படச் செய்ததில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் . இதேவேளை தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியர்களில் ஒருவரும் சிறுகதை மற்றும் கவிதை எழுத்தாளருமான பி . ரவிவர்மாவும் இதே தினத்தில் மரணமானார் 
இவர்களது மரணம் குறித்து இலங்கைத் தமிழ்ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தனது கவலையை வெளியிட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக