சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

18 அக்டோபர், 2013

பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது , மனிதநேய அமைப்புக்கள் கண்டனம்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்னை ஸ்ரீகாமாட்சியம்பாள் (நாச்சிமார் அம்பாள்) ஆலய தேர்முட்டியில்
இருந்து அழுகிய நிலையில் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உறவினர்களினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
அரியாலை நெடுங்குளம் வீதியைச்சோர்ந்த மார்க்கண்டு லோகராணி வயது 45 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 04 ம் திகதி முதல் குறிப்பிட்ட பெண் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பெண் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மன நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் இவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள கன்னியாஸ்திகளின் பராமரிப்பில் இருந்து வந்தவேளையில் காணாமல் போனதாகவும் உறவினர் தெரிவித்துள்ளார். 
இதே வேளை குறிப்பிட்ட பெண்ணின் சடலம் நேற்று துர்நாற்றம் வீசிய நிலையில் அயலவர்கள் தெடிய வேளையில் உடைகள் இன்றி காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தொவித்ததைத் தொடர்ந்து பொலிசார்ட சடலத்தை பொறுப்பேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதே வேளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்னை ஸ்ரீகாமாட்சியம்பாள் ஆலய தேர்முட்டியில் உடைகள் அற்ற நிலையில் காணபபட்ட பெண்ணின் சடலம் சம்பந்தமாக இன்று காலையில் வல்லமை அமைப்பினால் கண்டன நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.
குறிப்பிட்ட பெண் இறந்தமை சம்பந்தமாக பலத்த சந்தேகங்கள் காணப்படும் நிலையில் இத்தகைய மரணங்களை கண்டித்து இந்த நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது.
ஆலய வாசலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.பெண்கள் அமைப்பக்கள் மற்றும் புதிய ஜனநாக மாக்சிச லெனினிச கட்சி சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் உட்பட மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள்.
மரணம் அடைந்த பெண்ணின் உடைய ஆடைகளை தாங்கியவர்களாக நீ யார் என்று இதுவரை தெரியாது ஆனால் நீயும் ஒரு பெண் இனியும் எங்கள் நகரங்களில் இப்படியான கொடுமைகள் நடக்க நாம் இடம் கொடுக்கமாட்டோம் என பதாதையை தாங்கி இருந்தார்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக