அண்மையில் இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு நடத்தப்பட்டுள்ளது .
இதன்படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே இரண்டு லட்சத்து 6372 பேர் என புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது .
மேலும் இலங்கையில் 31 லட்சத்து 13 ஆயிரத்து 247 தமிழர்கள் வசிக்கின்றனர் . இதில் ஒரு கோடி 51 லட்சத்து 73820 பேர் சிங்களவர்களாவர் . 18 லட்சத்து 69820 பேர் முஸ்லிம்கள் . 33.061 பேர் பறங்கியர்கள் . 40189 பேர் மலே இனத்தவர்களாவர் .
2011 - 2012 ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சனத்தொகை மதிப்பீட்டிற்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளது .
இந்த சனத்தொகை மதிப்பீட்டின்படி இலங்கையில் பௌத்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடி 42 லட்சத்து 21 ஆயிரத்து 844 என்று தெரியவந்துள்ளது .
இந்துக்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரத்து 606 ஆகும் .
முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 67 ஆயிரத்து 227 என்றும் ரோமன்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 9 ஆயிரத்து 606 என்றும்
புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக