சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 நவம்பர், 2013

அனைத்துலகத்திடம் முறையிடுவோம்: இந்துமா மன்றம்


இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறியுள்ளது.
இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் வழிபாடுகள் நடத்த முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக
நடந்துவருவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள இந்து ஆலயங்களை மூடி வைத்திருக்காது பூஜைகள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்றும் கந்தையா நீலகண்டன் கூறினார்.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்திடம் தங்களின் பிரச்சனைகளை கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கீரிமலை உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த மூன்று இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி சென்றுபார்க்க முயன்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உள்ளே செல்ல அனுமதிக்காது இராணுவத்தினர் திருப்பியனுப்பி விட்டதாகவும் கந்தையா நீலகண்டன் கூறினார்.
வடக்கு மாகாண முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சுதந்திர கால அரசியல் தலைவர்களில் ஒருவரான சேர். பொன் இராமநாதன் இன்று இருந்திருந்தால் தமது மக்களின் நிலைகண்டு 'கண்ணீர் விட்டு அழுதிருப்பார்' என்றும் இந்து மாமன்றத்தின் தலைவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக