பொதுநலவாய உச்சி மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்காக வருகைதந்திருந்த
சனல்-4 ஊடகவியலாளர்கள் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த
முயற்சியை தான் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு
திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். சனல்-4 குழுவினர் அலரிமாளிகைக்கு செல்வதற்கு முயற்சித்ததாகவும் அந்த தகவலை
கேள்வியுற்று அவர்கள் தங்கிருந்த ஹோட்டலுக்கு எமது அதிகாரிகளை அனுப்பி
அறிவுறுத்தியதாகவும் சூலானந்த பெரேரா தெரிவித்தார். சனல்-4 குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களுடைய நாட்டுக்கு திரும்பி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக