பொதுநலவாய
மாநாட்டு விதிமுறை நகலை தீயிட்டு கொளுத்தி சவப்பெட்டியில் வைத்து அடக்கம்
செய்ய முயன்ற 33 பேரை பொள்ளாச்சி பொலிஸார் கைது செய்தனர்.
பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் தமிழ் ஈழ விடுதலை மாணவர் கூட்டமைப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் 'பொதுநலவாய' மாநாடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கையில் மாநாடு நடத்தியதால் 'பொதுநலவாய' விதிமுறைகள் இறந்து விட்டதாக கூறியுமே மாநாட்டு விதிமுறை நகலை தீயிட்டு கொளுத்தி சவப்பெட்டியில் அடக்கம் செய்யும் நூதனப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
இதற்கு, பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி நகரச் செயலாளர் வெள்ளியங்கிரி, மண்டலச் செயலாளர் கா.சு.நாகராசன், ஆனைமலை நகரச் செயலாளர் ஹரிதாஸ், தமிழ் ஈழ விடுதலை மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
இதையறிந்த பொலிசார் நகலை தீயிட்டு கொளுத்தி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முயன்றதை தடுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை நேற்று கைது செய்தனர்.

(நக்கீரன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக