சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

17 நவம்பர், 2013

ஜனாதிபதி மகிந்தவிடம் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கேள்வி எழுப்பிய சனல்-4 ஊடகவியலாளர்


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என சனல் 4 ஊடகவியலாளர் ஜெனத்தன் மில்லர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மில்லரின் கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி, ஒவ்வொருவரும் உவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நாங்கள் விசாரணைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டோம்.
காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அவ்விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஒருநாளோ. இரண்டு நாளோ அல்லது ஐந்து வருடமோ நடைபெற்ற யுத்தத்தை அல்ல, முப்பது வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். போரில் பொது மக்கள், இளைஞர்கள், மற்றும் யுவதிகள் என பலர் உயிரிழந்துள்ளனர். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பல இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை பாதுகாகப்பட்டுள்ளது. யார் எம் மீதுகுற்றம் சாட்டினாலும், விசாரணைக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என தெரிவித்துள்ளார

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக