பொதுநலவாய மாநாட்டையும் அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக
மாநாட்டையும் ( முன் உச்சிமாநாடு காமன்வெல்த் பிஸினஸ் ) புறக்கணிக்க
வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களாலும் தமிழ் தலைவர்களாலும்
முன்வைக்கப்பட்டு வருகின்றது .
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் பாரிய நிறுவனமாக
வளர்ந்துள்ள பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டியங்கும் லைக்கா மொபைல்
நிறுவனம் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அங்கீகாரம்
வழங்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு பாரிய நிதியுதவி வழங்கியுள்ளமை
அம்பலத்திற்கு வந்துள்ளது .
உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என பழ .
நெடுமாறன் வைகோ உட்பட தமிழக தலைவர்களும் பிரித்தானிய தமிழர் பேரவை உலகத்
தமிழர் பேரவை போன்ற பல புலம்பெயர்ந்த அமைப்புக்களும் தொடர்ச்சியாகக்
கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த மாநாட்டின் முன்னணி ( தங்க
ஸ்பான்சர் ) நிதியுதவி நிறுவனமாக லைக்கா குழுமம் திகழ்கின்றது .
இலங்கைத்தீவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால் அங்கு
நடைபெறும் பொதுநலவாய மாநாட்டையும் அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக
மாநாட்டையும் ( முன் உச்சிமாநாடு காமன்வெல்த் பிஸினஸ் ) புறக்கணிக்க
வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு
வருகின்றது .
பிரித்தானியாவைச் சேர்ந்த நூறிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
கொழும்பில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ' இலங்கையில் வர்த்தக
முதலீடு ' செய்வது பற்றிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன .
கொழும்பு சென்றுள்ள நிறுவனங்களில் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில்
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் பெரும் இலாபம் ஈட்டிவரும்
லைக்கா மொபைல் ( Lyca மொபைல் ) , லைக்கா ரெல் ( Lyca தொலைபேசி ) மற்றும்
லைக்கா ஃபிளை ( Lyca ஃப்ளை ) போன்ற நிறுவனங்களைக் கொண்ட லைக்கா
குழுமமும் ( Lyca குழு ) ஒரு முக்கிய நிதியுதவியாளராக அடங்கியுள்ளமை
பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . அத்துடன் பொதுநலவாய
மாநாட்டிற்கும் லைக்கா குழுமம் நிதியுதவி வழங்கியிருக்கின்றது .
கனடா இந்தியா மற்றும் மொறீசியஸ் போன்ற நாடுகளின் பிரதமர்கள்
கொழும்பு மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில் பிரித்தானியப் பிரதமர்
டேவிட் கமறூன் தமிழ் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இன்று (15-11-2013)
கொழும்பு செல்லுகின்றார் . இதனையொட்டி பிரித்தானிய ஆளும் கட்சிக்கு
நிதியுதவி செய்யும் நிறுவனங்கள் கடந்த 12 ஆம் திகதி முதல் இன்றுவரை
நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன .
இதற்கென கொழும்பு சென்ற லைக்கா மொபைல் உட்பட வர்த்தக நிறுவனங்களின்
பிரதிநிதிகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பளித்த சிறீலங்கா அரசாங்கம் அவர்களை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து உலங்கு வானூர்திகளில் அழைத்துச்
சென்று மிகவும் இராஜ மரியாதை வழங்கியுள்ளது . இதில் லைக்கா மொபைல்
நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் அடங்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிதியுதவி மாநாடு பற்றிக் கருத்துரைத்த சர்வதேச மன்னிப்புச்
சபையின் இயக்குனர் கேட் அலென் ( கேட் ஆலன் ) , பாரிய மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்ட ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் இந்த வர்த்தக மாநாடு
முதலீட்டிற்கான வாய்ப்பாக அமைந்துவிடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார் .
ஆனால் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட முதலீடு ஏற்கனவே
உறுதி செய்யப்பட்டுள்ளது .
கொழும்பு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றிய
தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு ஊடகமான கோர்பறேட் வொச் ( கார்ப்பரேட்
கண்காணிப்பு ) வெளியிட்டுள்ளது . இதில் லைக்கா மொபைல் முக்கிய இடத்தில் (
தங்க ஸ்பான்சர் ) இருப்பதை மேலுள்ள இணையத்தின் இணைப்பில் பார்வையிடலாம் .
லைக்கா மொபைல் நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமான ஏன்ஸ் அன்ட் யங் ( Ernst
& Young ) நிறுவனமும் கொழும்பு சென்றுள்ளது . அத்துடன்
பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெருமளவில் பாவிக்கும் வீட்டுத் தொலைபேசிச்
சேவை நிறுவனமான பி . ரியும் ( பிடி ) இதில் அடங்கியுள்ளது .
தமிழரின் நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் பிரித்தானிய ஆளும்
கட்சிக்கு இதுவரை 426293,00 பவுண்ஸ்களை நிதிப்பங்களிப்பாக வழங்கி அந்தக்
கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது . ஆனால்
2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை என கடந்த
சில மாதங்களுக்கு முன்னர் லண்டனின் முன்னணி ஊடகங்கள் செய்தி
வெளியிட்டிருந்தமை தமிழ் மக்களிற்கு பெரும் ஏமாற்றத்தையும் சங்கடத்தையும்
ஏற்படுத்தி இருந்தது .
இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பெரும் நிதிப்பங்களிப்பில்
வளர்ந்த லைக்கா குழுமம் போர்த்துக்கல்லில் உள்ள தனது இணை நிறுவனமான
ஹேஸ்டிங்ஸ் வர்த்தக மின் Serviços Lda ஊடாக மகிந்த ராஜபக்சவின் மருமகனான
ஹிமால் லலிந்த ஹெட்டியாராச்சியின் ( Himal Lalindra Hettiarachchi )
பெயரிலுள்ள சிறீலங்காவின் வயர்லெஸ் சேவை வழங்கும் நிறுவனத்தின் 95 வீதமான
பங்கை 2007 ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளமையும் இப்பொழுது தெரிய
வந்துள்ளது . மகிந்தவின் மருமகனின் இந்த நிறுவனத்துடன் 100 மில்லியன்
அமெரிக்க டொலர் நட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு
சிறீலங்கா ரெலிகொம் தள்ளப்பட்டுள்ளது .
இதேவேளை லைக்கா குழுமத்தின் லைக்கா ஃபிளை ( Lyca ஃப்ளை ) நிறுவனமும்
பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரசாங்கத்திற்கு பெரும்
வருவாயை ஈட்டிக்கொடுக்கும் மகிந்தவின் மைத்துனரின் பெயரிலுள்ள சிறீலங்கன்
எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகின்றது . அத்துடன்
சிறீலங்காவிற்கு செல்லுவதற்காக சுற்றுலாச் சலுகைகளையும் லைக்கா ஃபிளை (
Lyca ஃப்ளை ) போருக்குப் பின்னர் வழங்கி வருவதால் சிறீலங்கா அரசாங்கம்
அதனூடாகவும் அந்நியச் செலாவணியைப் பெற்று வருகின்றது .
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளிக்க லைக்கா குழுமம் மறுப்புத் தெரிவித்து வருகின்றது .
எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது சனல் -4 போன்ற ஊடகங்கள் தமிழ்
மக்களிற்காகவும் மனித உரிமைகளுக்காவும் குரல் கொடுத்து வரும் நிலையில்
தமிழ் மக்களின் பணத்தில் வளர்ந்த லைக்கா குழுமம் அந்த மக்களைக்
கொன்றொழித்து போர்க்குற்றம் புரிந்த அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கி
வருகின்றமை ஏற்க முடியாத ஒரு விடயம் .
போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்பொழுதும் அடிப்படை வசதிகள்
அற்ற நிலையில் அவலப்பட்டு வருகின்றனர் . வெளிநாட்டு அரசாங்கங்களும் தொண்டு
நிறுவனங்களும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிற்கான அவசர உதவிகளில்
மூழ்கியுள்ளன . இந்த நிலையில் தமிழ் மக்களின் பணத்தில் புலம்பெயர்
நாடுகளில் வளர்ந்த லைக்கா மொபைல் போன்ற நிறுவனங்கள் தாயகத்தில்
அவலப்படும் மக்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து விலக முடியாது .
தவறினால் இவ்வாறான அமைப்புக்களிற்கு பதிலடி கொடுக்க புலம்பெயர்ந்த மக்கள்
பின்னிற்க மாட்டார்கள் என்பது உறுதி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக