இன்று அதிகாலை 5 மணிக்கு நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள்
போலீசார் உதவியுடன் முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவின் ஒரு
பகுதியை இடித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை
அயோக்கியத்தனமானது . ஜெயலலிதாவின் இந்தச் செயல்களுக்கு பாவமன்னிப்பே
கிடையாது என்று கடுமையான ஆவேசத்துடன் மதிமுக செயலர் வைகோ தெரிவித்தார் .
இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக
முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது . உலக தமிழ் பேரமைப்பு சார்பில்
கடந்த 8 - ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது .
இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10 - ம் தேதி முடிவடைந்த நிலையில்
இன்று காலை 500 க்கும் மேற்பட்ட பொலிஸாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம்
சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது .
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு
நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை , நெடுஞ்சாலைத்துறை ,
காவல்துறையினரால் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது .
இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ . நெடுமாறன் கைது
செய்யப்பட்டார் . இதையடுத்து அங்கு வந்த வைகோவை பொலிஸார் தடுத்தனர் .
ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று
அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார் .
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ,
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ . நெடுமாறன் ,
முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார் . ஆனால் பதிலேதுமில்லை
. அடுத்த அவர் தா . பாண்டியன் மூலமாக பேசி வந்தார் . அப்போதும் சரியான
பதிலில்லை . இதையடுத்து கடந்த 8 ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது .
இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா .
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை
அயோக்கியத்தனமானது .
கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை
வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார் . ஆனால் , லட்சோப லட்சம்
மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது .
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ! இது போயஸ் கார்டன் சொத்தோ ,
ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது . கேள்வி கேட்க ஆள் இல்லை என்று
இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் . இதைப் பார்த்து உலகத்தமிழர்கள்
காறித்துப்புவார்கள் .
ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது . எத்தனை
தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால்
தூசுக்குச்சமம் .
முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து . நாங்கள் உள்ளே போவோம் .
அதை தடுக்க முடியாது . ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே
கிடையாது என்றார் வைகோ கடுமையான ஆவேசத்துடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக