சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 நவம்பர், 2013

பிரான்ஸின் தேசிய அதிவேகத் தொடருந்து திங்கட்கிழமை மாலை தீப்பிடித்துக் கொண்டது ( RER-B)

 
பிரான்ஸின் தேசிய தொடருந்து சேவையான RER B யின் தொடருந்து ஒன்று தீப்பிடித்துக் கொண்டதால்  திங்கட்கிழமை மாலை தொடருந்துப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ROBINSON தொடருந்து நிலையத்தை   இறுதித் தரிப்பிடமாகக் கொண்ட தொடருந்து அனைவரும் இறங்கிய பின்னரே தீப்பிடித்துக் கொண்டது. 
 
 இத்தீயானது 17h00 மணியளவில் பற்றிக் கொண்டது. தீப்பிடித்து  சில நிமிடத்தின் பின்னர் தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்தின் இறுதியில் தீயை அணைத்தனர். அரை மணி நேரத்தின் பின்னர் தீ முற்றாக அணைக்கப்பட்ட பின்னர் 18h10 அளவில் இருந்து மெதுவாகப் போக்குவரத்து வழமை நிலைக்குத் திரும்பியது. 
 
இத் தீக்கான காரணம் குற்றச் செயல்கள் எனக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஒரு இளைஞர் குழு ஒன்று தீப்பிடிக்கு முன்னர் அவ்விடத்தில் கூடி நின்றதாகவும் அவர்கள் அகலும் போதே தீப்பிடிக்க ஆரம்பித்ததாகவும் RATP யினர் கூறி உள்ளனர். இதற்கான விசாரணைகளைக் காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக