சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 நவம்பர், 2013

மஹிந்தருக்கு எதிராக கனடா,பிரிட்டன், அமெரிக்கா கூட்டு பிரேரணை

அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ. நா மனித உரிமைப் பேரவையில் பிரித்தானிய, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து சிறிலங்காவுக்கு எதிராக கூட்டு யோசனையை முன்வைக்கவுள்ளன என தெரிய வருகிறது.
இவ்வாறானதொரு கூட்டு யோசனை மார்ச் மாதம் 21 ஆம் 23 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. இதேவேளை, நவநீதம்பிள்ளையும் மார்ச் 20 இல் சிறிலங்கா தொடர்பில் அறிக்கையை ஒன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
கூட்டு அறிக்கை தயாரிப்பு தொடர்பான பணிகளில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக், நவநீதம்பிள்ளையுடன் இணைந்து செயற்படவுள்ளார். இதேவேளை, மனித உரிமைப் பேரவையில் புதிதாகச் சேர்ந்துள்ள நாடுகளில் பல நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக