கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆக்கத்திறன் கண்காட்சி கூடத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில்
கண்காட்சி கூடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
மூன்று நாள் கொண்ட ஆக்கத்திறன் கண்காட்சியின் ஆரம்ப நாளான இன்று , அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கண்காட்சி கூடம் ஆரம்பித்து வைக்கப்பட்டு 15 நிமித்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .
இதனால் காட்சி கூடம் முற்றாக எரிந்துள்ளதுடன் , தீயணைப்பு படையினர்
தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருதாக அங்கிருந்து
வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .இதேவேளை தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக