யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் இருந்து இடம்
பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கக் கோரி
முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளைக்
கடந்துள்ளது.
மாவிட்டபுரம்
கந்தசுவாமி கோவில் வாசலில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த உண்ணாவிரதப்
போராட்டத்தில் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து மக்களும்
அரசியல்,மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவை
தெரிவித்து வருகின்றனர்.
வலிகாமம் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து, பல பகுதிகளிலும், பொது
இடங்களிலும்,உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கி வாழும் மக்கள் தமது
காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை
தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.
இன்று
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன் தமிழ்த் தேசிய
முன்னனியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் மற்றும் வட
மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்
.கே.சிவாஜிலிங்கம, பா.கஜதீபன் மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள்
உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
வழமை
போன்று இன்றும் உண்ணாவிரதம் இடம் பெற்ற சுற்றாடலில் சிங்களக் காவல்துறை,
மற்றும் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக