இலங்கை தொடர்பில் தான் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்
செயற்படவில்லையென சனல் 4 தொலைக்காட்சியின் சுயாதீன ஊடகவியாளரும் போர்
தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே தெரிவித்தார்.
ஒரு ஊடகவியலாளன் தனது கடமையை செய்ய வேண்டும். இலங்கை பிரச்சினையில் நான் செய்து வருவது சரியானதே என்றார் இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக
கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அவர் இயக்கிய போர் தவிர்ப்பு வலயம்
ஆவணப்படம் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிப்புக்காக
இலங்கை வந்த மக்ரே, விமான நிலையத்தில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை
எதிர்கொண்டதுடன் வடபகுதிக்கு செல்ல அவர் மேற்கொண்ட முயற்சியின் போதும்
இவ்வாறான எதிர்ப்பை எதிர் கொண்டார்.
கெலும் மக்ரே விடுதலைப்புலிகளிடம் சம்பளத்தை பெற்று வருவதாக சில
ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றம் சுமத்தினர்.இதற்கு பதிலளித்த மக்ரே இது
ஆதாரமற்றதும் அடிப்படையற்றதுமான குற்றச்சாட்டு எனக் குறிப்பிட்டார். நான் முதலாவது காணொளி ஆவணப்படத்தை இலங்கையில் தயாரித்தேன். அதன் பின்னர் சில தகவல்களையும் காணொளி காட்சிகளையும் பெற்றேன் என்றார். இந்த காணொளிகள் உண்மையானது என்பதற்கு என்ன உத்தரவாதம் என எழுப்பட்ட
கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்துள்ள மக்ரே, அது ஒளிப்பரப்படும் முன்னர்
அதன் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்ட பின்னரே ஒளிப்பரப்பட்டது எனக்
கூறினார்.
எனது இறுதி காணொளி ஆவணப்படம் பொதுநலவாய மாநாட்டுக்கு முன்னர்
தயாராகியது. எனினும், சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் இது
வெளியிடப்படவில்லை.
ஒரு ஊடகவியலாளன் என்ற முறையில் எனது கடமைகளை முன்னெடுக்க இலங்கை
வருவதற்கான வீசா வழங்கப்பட்டது. எனினும் வருகை தந்த நாள் முதல்
புலனாய்வுதுறை மூலம் எனது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. இது
ஏமாற்றத்தை அளிக்கின்றது எனவும் கெலும் மக்ரே குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக