சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

20 நவம்பர், 2013

யாழ்.நகரினில் மஹிந்தவின் உருவப்படம் நேற்றிரவு தீக்கிரை!!

 
யாழ்.நகரின் புனித பத்திரிசிரியார் பாடசாலைக்கருகாக நிறுவப்பட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்தவின் உருவப்படம் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தை பிரபல்யப்படுத்துவதற்காக இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா பரவலாக ஜனாதிபதி மஹிந்தவின் தனியான உருவப்படங்களையும் தான் மற்றும் ஆளுநர் சந்திரசிறியுடனான உருவப்படங்களையும் நிறுவி வைத்துள்ளார்.வடக்கின் அபிவிருத்தி வெறுமனே விளம்பரப்பலகைகளினில் இருப்பதாக பகிரங்கமாகவே வெளிநாட்டு ராஜதந்திரிகள் நையாண்டி செய்வதாக அமைந்துள்ளது.

இந்நிலையினில் அண்மைக்காலமாக இத்தகைய விளம்பரப்பலகைகள் தாக்கி சேதப்படுத்தப்படுவதும் கிழிக்கப்படுவதும் ஆரம்பமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு மாகாணசபை தேர்தலின் பின்னதாக இத்தகைய போக்கு என்றுமில்லாத அளவினில் அதிகரித்து வருகின்றது.அவ்வாறான சூழலினிலேயே தற்போது ஜனாதிபதி மஹிந்தவின் உருவப்படம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.யாழ்.ஆயர் இல்லம் மற்றும் புனித பத்திரிசிரியார் பாடசாலை என்பவை அமைந்துள்ள சூழலினில் நிறுவப்பட்டிருந்த உருவப்படNpம தீக்;கிiராயக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் படைத்தரப்பினிடையே கடும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.ஏற்கனவே வலிகாமத்தின் ஆனைக்கோட்டைப்பகுதியினில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையினில் இத்தீவைப்பு இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக