Montreuil பகுதியில் சிறிய புத்தக வெளியீட்டு நிறுவன உரிமை யாளரான M. Benady யூத இனத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கு Bobigny குற்றவியல் நீதி மன்றத்தால் 5000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்
: இவர் தனது வர்த்தக நிலைய சுத்திகரிப்புக்கு வேலைக்கு ஆட்கள் தேடுவதாக
Pole Emploi வில் ஒரு விளம்பரத்தை கொடுத்திருந்தார். அந்த விளம்பரத்தில்
‘மெக்ரப்’ இனத்தவர்கள் தவிர்த்து எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது வடக்கு
ஆபிரிக்காவைச் சேர்ந்த அல்ஜீரியா, மொறக்கோ, துனிசியா போன்ற
நாட்டு இஸ்லாமியர்கள் தவிர்த்துமற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனப் பொருள் பட
குறிப்பிட்டிருந்தமைக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யூதர்களுக்கு
எப்பொழுதும் இஸ்லாமியர்களால் உயிராபத்துப் பயம் உள்ளது. அவர்களை நம்பி
எப்படி வேலைக்கு அமர்த்த முடியும் எனத் தன்னிலை விளக்கமும் கொடுத்துள்ளார்.
பிரான்சில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது இன அல்லது மத
அடிப்படையில் பாகுபாடு; பார்ப்பது, முற்றாக தடை செய்யப்பட்ட அணுகு முறை என
நீதி மன்றம் உறுதிபடத்தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக