சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 நவம்பர், 2013

இந்திய விண்வெளி வரலாற்றில் செவ்வாய் கிரகம் நோக்கி மங்கள்யான் வெற்றிகரமாக திருப்பிவிடப்பட்டது


செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு

பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் 2 லட்சம் கி.மீ. தூரத்தை விண்கலம் எட்டி விட்டதால் அடுத்தகட்டமாக மங்கள்யானை செவ்வாய் கிரகம் நோக்கி திசை திருப்பும் பணியும் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்புவது என்பது மிகவும் சிக்கலானது என்பதால் மங்கள்யானுக்கு இது முக்கிய கட்டமாகும். செவ்வாய் நோக்கி பயணத்தை திசை திருப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மங்கள்யானின் பயணத்தில் மிக முக்கியமான படிநிலையாக கருதப்பட்ட இந்த பணி இந்திய நேரப்படி, இன்று நள்ளிரவு 12.49-க்கு துவங்கியதாகவும், தற்போது, சூரியனை சுற்றி சுமார் 680 மில்லியன் கிலோமீட்டர் பயணத்தை 300 நாட்களில் பூர்த்ய் செய்யும் மங்கள்யான்,அடுத்த(2014) ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக